வாட்ஸ்அப் செயலி புதிய அம்சமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன்படி மெட்டா நிறுவனம் விரைவில் AI மூலம் வாட்ஸ்அப்பில் ஒரு புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் வாட்ஸ்அப்பானது Meta AI Voice Chat உடன் அறிமுகமாகவுள்ளது.
பயனர்கள் குரல் மூலம் மெட்டா AI இடம் கேள்விகளைக் கேட்டால், அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்கும்.வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம் என கூறப்படுகிறது.
குறித்த அம்சத்தின் உதவியுடன் காணொளியின் பின்னணியை மாற்றம் செய்ய முடியும்.இனி தொலைபேசி எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.