2023 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தன் விதிமுறைகளுக்கமைய, இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உதவி ஆளுநர் சி. அமரசேகர, மற்றும் உதவி ஆளுநர் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் முறையே 24 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3 ஆம்த திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










