நாட்டில் டெங்கு நோயினை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவோம் என இலங்கைக்கான கியூபா தூதுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோதே கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, அவர், இலங்கையுடனான ஒத்துழைப்பை பலப்படுத்த தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇