இலங்கை விமானப்படை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விமானப்படை தலைமையகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கன் விமானச்சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
விமானப் பயிற்சி, கல்வி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகளில், இலங்கை விமானப்படை மற்றும் ஸ்ரீலங்கன் விமானச்சேவை நிறுவனத்துக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த உடன்படிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.