காற்றின் தரம் அபாயகரமான நிலைக்கு மீண்டும் வீழ்ச்சியடைந்து இந்தியாவின் டெல்லியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்-19 தொற்றை விடவும் இது சுகாதார ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு எல்லையை விடவும் டெல்லியின் காற்றின் தரம் 35 மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண்கள் மற்றும் தொண்டையில் அரிப்பு இருப்பதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் முதியவர்களை முடியுமான அளவு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇