உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக வருடம்தோறும் சர்வதேச தாய்மொழி தினம் ‘பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
இந்த வருடம் சர்வதேச தாய்மொழி தினம் “மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 1952ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வருடந்தோறும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியை உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்மொழிந்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999ஆம் ஆண்டு அந்த தீர்மானத்தை அங்கீகரித்தது.
இதையடுத்து கடந்த 2000 ஆண்டிலிருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
2032ஆம் ஆண்டளவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் மொழியில் தேர்ச்சி பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம்.
அந்த பெருமிதத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் மொழி ‘தாய்மொழி’ அமைந்துள்ளது.
அப்படிபட்ட மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த சில இளைஞர்களை நினைவுகூரும் நாளே தாய்மொழி தினமாக மாறியது.
மொழி மனித இனத்தின் நாகரீக பரிணாமத்தின் ஆரம்பப் படிநிலைகளில் ஒன்றான மொழி தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் கருவியாக மாத்திரமின்றி ஒரு சமூகத்தின் பண்பாட்டுடனும் , கலாசாரத்துடனும் ஒன்றிணைந்து சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் சாதனமாகவே மொழி திகழ்கின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










