‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

க.வசந்தகுமாரி எழுதிய ‘தவங்களெல்லாம் வரங்களாவதில்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவை சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் கலந்துகொண்டதுடன் நூலின் முதல் பிரதியை இலங்கை பொண்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.

இவ்விழாவில் சிறப்பதிதிகளாக கொழும்பு மாநகசபை பிரதிமேயர் இக்பால், வீரகேசரி பிரதம ஆசிரியர் சிறிகஜன், சுதர்சன கமகே, ஜனாதிபதியின் ஆலோசகர் ஆனந்தகுமார், இலங்கை நெய்னார் காப்பக தலைவர் இம்ரான் நெய்னார், பிரபல பாடகர் கலைக்கமல், பிரபல கவிஞர் நஜ்முல் ஹுசைன், தினகரன் பிரதி பிரதம ஆசிரியர் ஈஸ்வரலிங்கம், பிரபல கலைஞர் மொழிவாணன், தொழிலதிபர் நிஷாம் காரியப்பர், தெலுங்கு காங்கிரஸ் தலைவர் அன்பழகன், எம்.ஜி ஆர் மன்ற தலைவர் இத்ரீஸ் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பை மற்றும் புத்தகங்கள் அடங்கிய பரிசு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects