தீபாவளியை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்ட பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாளை (02.11.2024) மீண்டும் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனினும், பணிப்புறக்கணிப்பு இன்று (01.11.2024) இடம்பெறாது என அச்சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், வேதனம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி 30.10.2024 அன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 30.10.2024 அன்றைய தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇