தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17.03.2025) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள விண்ணப்பதாரிகள் தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் , இன்று (17.03.2025) நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

அதேநேரம், தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எந்த சூழ்நிலையிலும் நீடிக்கப்படாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects