மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம வாக்கென்னும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் ஒழுங்கு படுத்தலின் கீழ் பிரதம வாக்கென்னும் அலுவலர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல்களின் போது பிரதம வாக்கென்னும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாக உதவி தேர்தல்கள் ஆணையாளரினால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ் கலந்து கொண்டார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇