ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
2 Responses
அதான் வேலை. அப்பிடியே இந்த பரீட்சுயும் தடை செய்யப்படணும்.
ஆணையாளர் நாயகம் சொல்லுவார். அத நம்மட வாத்திமார் கேப்பானுகளா. பணப்பேய்கள்