தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இக் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக் கப்பல் சேவைக்கான சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇