ஐந்து வருடங்களுக்குப் பின்னர் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிக்காக அதன் எல்லைகளைத் திறப்பதற்கு வடகொரியா தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அதன் எல்லைகளைத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக சுமார் ஐந்து வருடங்களாக வடகொரியா சுற்றுலாப்பயணிகளுக்காகத் தமது எல்லைகளை மூடியிருந்தது.
இந் நிலையில், தென்கொரியா சுற்றுலாப் பயணிகளைத் தவிர ஏனைய நாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கு வடகொரியாவிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எல்லை மூடல் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியையும் பாரியளவில் பாதித்திருந்தது.
நாட்டின் அணுசக்தித் திட்டம் காரணமாகச் சர்வதேச நாடுகள் தடைகளை ஏற்படுத்தியிருந்தன.
இதன் காரணமாக, உணவு தட்டுப்பாடு உச்சத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇