சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் அடுத்த வாரத்தில் பரிசீலிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை 27.05.20226 அன்று பரிசீலிக்கவுள்ளது.

அதன் அடிப்படையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.

இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவாலான வெளிப்புறச் சூழலில் உள்ள பல பொருளாதாரங்களைப் போலவே, சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்களும் புதிய அழுத்தங்களைக் கொண்டுவந்துள்ளன.

இவ்வாறான அதிர்ச்சிகளைக் கையாள்வது ஒருபோதும் எளிதானதல்ல, ஆனால் இலங்கையின் இன்றைய கொள்கை கட்டமைப்பு கடந்த காலத்தை விட கணிசமாக வலுவாக உள்ளது, என்று அவர் வலியுறுத்தினார்.

நிலைத்தன்மையான கொள்கை வழிமுறையைப் பேணுவதும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் சீரமைக்க தொடர்ந்து அனுமதிப்பதும், இதுவரை அடைந்துள்ள நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் முன்னோக்கி நகரும் வேளையில், இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குவதாக என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects