தேசிய மொழிகள் பிரிவின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட சித்தாண்டியில் அமைந்துள்ள விபுலானந்தா பொது நூலகத்திற்கு ஒரு இலட்சம் பெறுமதியான நூல்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனால் 22.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.எம். றிழா, சித்தாண்டி பொது நூலக உதவியாளர் ஜே.சுகந்தினி எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி.சந்திரகுமார், பிரதம முகாமைத்துவ உதவியாளர் கே.எம். றிழா, சித்தாண்டி பொது நூலக உதவியாளர் ஜே.சுகந்தினி கலந்து கொண்டனர்.
பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் மாணவர்களிடையே கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதுடன் இரண்டாம் மொழி அறிவினை விருத்தி செய்வதற்காக இவ் நூல்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் வ.பற்குணனிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇