அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சமுத்திரங்கள், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டுக்கு வருகைதரவுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவர், இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவர் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இலங்கை விஜயத்தின் போது இயற்கை, கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பாவனை, காலநிலை பாதிப்பு மற்றும் காடழிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇