ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத தகவலை புகைப்படமானது ஒரு நொடிப் பொழுதிலே பேசிவிட்டு செல்கிறது. ஒரு சிறந்த புகைப்படவியல் என்பது பார்வையாளரின் மனங்களில் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
உலகப் புகைப்பட தினம் ஆகஸ்ட் 19ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இது புகைப்படத்தின் முக்கியத்துவம் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் நாளாகும்.
19 ஆம் நூற்றாண்டின் பெருமை அல்லது சாதனையை ஆரம்பத்திலே லூயிஸ் டாகுவேரே என்பவரினால் “டாகுரி யோடைப்” என புகைப்படத்தின் செயல் பாட்டு முறையை வடிவமைத்தார். பின்னர் 1839 ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே பாரிஸில் உள்ள போல்வர்கு கோயிலை அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார்.இதுவே தனிநபரினால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படமாக கருதப்படுகிறது.
எனினும் 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவரே முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரான்ஸ் நாடு வரது செயற்பாடுகள் குறித்து ப்ரீடூதி வோல்டு என உலகம் முழுவதும் அறிவித்து இதனை எடுத்துரைக்கும் முகமாகவே இன்றைய தினம் உலகப் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. புகைப்படம் எடுப்பதற்கு மிக முக்கியமான விடயமாக ஒளி கருதப்படுகின்றது. இதில் இயற்கை மற்றும் செயற்கை ஒளிகள் இணைப் பயன்படுத்தப்பட்டு எடுக்கப்படுகின்ற புகைப்படம் ஆனது உணர்ச்சிகள் வெளிக்காட்டப்படுகிறது கமரா தனது ஒளிப்பதிவை மேற்கொள்கிறது. புகைப்படம் எடுப்பதற்கு பொருத்தமான நேரத்தினை குறிப்பாக அதனை கோல்டன் ஹவர் என்று கூறுவார்கள். அதாவது சூரியன் காலை உதித்த பிறகு சில மணி துளிகள் அதேபோல் சூரியன் மறையும் முன்னரான சில மணித்துளிகள் புகைப்படத்தினை பதிவு செய்வதற்கு உகந்த நேரமாக கூறப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇