விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024/2025 மகா பருவத்தில் நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய், சோயா அவரை மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களுக்கு இழப்பீடாக இந்த ஆண்டு ரூ.1,484 மில்லியன் செலுத்தியுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 87,690 ஏக்கரில் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர்களைப் பயிரிட்ட 74,958 விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், வறட்சி, வெள்ளம் மற்றும் வனவிலங்குகளால் சேதம் ஏற்படும் போது, இப் பயிர்களைப் பயிரிடுபவர்களுக்கு அவர்களின் பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.100,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் அதிகமாகப் பயிரிட ஊக்குவிக்கும் நோக்கில் இலவச பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இப் பயிர் சேத இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects