மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் விஞ்ஞான வினா விடை போட்டியின் முதல் கட்ட எழுத்து மூலப் பரிட்சை இன்று கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் மண்முனை மேற்கு கல்வி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.
அருள் – ஸ்ரீ அறக்கட்டளையினால் 2024 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக புலைமைப்பரிசில் திட்டம் ஒன்றினை முன்னெடுத்து தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கான இந்த வினா விடைப் போட்டி நடைபெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் 32 பாடசாலைகளில் இருந்து 128 மாணவர்கள் பங்குபற்றியதுடன் இவர்களில் முதல் ஐந்து இடத்தை பெறும் பாடசாலைகள் அடுத்த கட்ட வினா விடை போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
அந்தவகையில் இடம்பெற்ற வினா விடை போட்டியில் முதலாவது இடத்தினை அரசடித்தீவு விக்ணேஸ்வரா மகா வித்தியாலயமும் இரண்டாவது இடத்தினை முதலைக்குடா மகா வித்தியாலயமும் மூன்றாவது இடத்தினை கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயமும் நான்காவது இடத்தினை கொக்கட்டிச்சோலை இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயமும் ஜந்தாவது இடத்தினை அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டு இரண்டாம் கட்ட வினாவிடை போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
இப்போட்டியில் வெற்றிபெறும் முதல் 20 மாணவர்களுக்கு அவர்களது கற்றல் செயற்பாடுகளுக்கான நிதியுதவி அருள் – ஸ்ரீ அறக்கட்டளையினால் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇