பூமியின் வளிமண்டலத்தில் வெடிப்புக்குள்ளான 9ஆவது விண்கல்லை மனிதகுலம் கண்ணுற்றிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
ஃபிலிப்பின்ஸ் – லூசானா தீவுக்கு மிக அருகில் வான் பரப்பில் 05.09.2024 அன்று அதிகாலை விண்கல் ஒன்று எரியுண்டது.
இதனை எதேட்சையாக சிலர் காணொளியாகப் பதிவு செய்திருந்தநிலையில், அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
2024ஆர்.டபிள்யு.ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1 மீற்றர் நீளமுடையது என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு மீற்றருக்கும் குறைந்த நீளம் கொண்ட விண்கற்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பூமியில் விழுகின்ற போதும், அவை பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்து அழிகின்றன.
எனினும் அவை எரிந்து அழிவதற்கு முன்னர் மனிதர்களால் அவதானிக்கப்படுவது மிகவும் அரிதாகவே நிகழ்கின்றது.
அவ்வாறு மனித குலத்தினால் அவதானிக்கப்பட்ட 9ஆவது விண்கல் இதுவென்று நாசாவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇