பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கல பாகங்களின் குப்பைகள் அதிகரித்து வருவதால், வரும் காலங்களில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

அதன் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் ஒன்று அல்லது இரண்டு பூமியின் வளிமண்டலத்திற்குள் திரும்பி நுழைகின்றன. 

வரும் வருடங்களில் ஸ்பேஸ்எக்ஸ், அமேசானின் குய்பெர், சீன அமைப்புகளினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதுகுறித்து, வான் இயற்பியல் நிபுணர் ஜோனதன் மெக்டோவல் கூறுகையில், ஏற்கெனவே வின்வெளியில் 8,000 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் இருக்கின்றன. 

அனைத்துமே பயன்படுத்தப்படுவதால், பூமியின் சுற்றுப் பாதையில் 30,000 மற்றும் சீன அமைப்புகளினால் 20,000 என நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செயலிழந்த செயற்கைக் கோள்கள், விண்கல பாகங்கள் மற்றும் பிற குப்பைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அது பூமியை கெஸ்லர் சின்ட்ரோம் பாதிப்புக்கு உள்ளாக்கும். 

விண்வெளியில் உள்ள குப்பைகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு, அது மேலும் குப்பைகளை உருவாக்கி, செயற்கைக் கோள் மற்றும் விண்வெளி பயணத்துக்கே அச்சுறுத்தலாக அமையும். 

ஸ்டார்லிங்க் நெட்வொர்க், உலகளாவிய இணைப்பில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், அதன் விரைவான வளர்ச்சியோ விரிவாக்கமோ பூமியின் சுற்றுப் பாதையில் நெரிசலை அதிகரிக்கிறது. 

வரும் வருடங்களில் பல்லாயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விண்வெளி போக்குவரத்து மற்றும் குப்பைகளை நிர்வகிப்பது என்பது சவாலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects