டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ 20.11.2023 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன் பிரகாரம் அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன் மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விலையேற்றம் நீண்டகாலமாக பாரிய ஆலை உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நிரந்தர தீர்வை வழங்குவது தொடர்பில் 20.11.2023 அன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇