மட்டக்களப்பு மாவட்ட வவுனதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியில் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனையடுத்து, 26.04.2025 அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, மேற்கு, வவுனதீவு மற்றும் பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை) ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் அமுல்படுத்தப்படும்.
பொதுமக்கள் இந்த நீர் வெட்டுக்கு முன்னேற்பாடு செய்து, தேவையான அளவு நீரை சேமித்து வைக்குமாறு, மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் S. ஜெயந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










