நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழையும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பாதுகாப்பான இடங்களை நாடவும். மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகள் போன்ற திறந்த வெளிப்பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்கவும்.
மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மோட்டார் சைக்கிள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
வீழ்ந்துள்ள மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










