இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவிய ரீதியில் உள்ள நிதி நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1161 பில்லியன் ரூபாய் வாகன ஆதரவு கடன்களை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பொன்றின் போது, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆர். கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வலுவான தேவையைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த கடன்களில் பெரும்பாலானவை குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆளுநர் கூறியுள்ளார். 

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் சுமார் 1,837 பில்லியன் ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணமாக வழங்கியுள்ளதாக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects