சீன பொதுவுடைமை கட்சியின் சர்வதேச பிரிவின் துணை அமைச்சர் ஷன் ஹயன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23.04.2024) இலங்கை வரவுள்ளார்.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்பாதுகாப்பு, முதலீடுகள், இருநாடுகளின் நட்புறவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளை (24.04.2024) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇