அஞ்சல் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கைப் பதிவு செய்ய, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை எடுத்துச் செல்வது கட்டாயமானது என தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு அதனைத் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம்,

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தால் விநியோகிக்கப்படுகின்ற தகவல்களை உறுதி செய்யும் கடிதமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects