யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் இறந்துள்ளார். எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அத்தோடு இந்த காலப்பகுதியில் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇