சுற்றுலாப் பயணிகள் உட்பட பயணிகளின் தேவையினை கருத்தில் கொண்டு நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை கலிப்சோ புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் கலிப்சோ புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இப் புகையிரத சேவையானது பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையில் குறித்த புகையிரத சேவையினை நானுஓயாவில் இருந்து தெமோதரை வரை முன்னெடுப்பதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










