பொது மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகள் வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது.

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான விலைமுறி ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சர்வதேச விலைமதிப்பீடுகளை அழைப்பதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பைக் கருத்தில் கொண்டு, இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை ஓர்டர் செய்த அதே நிறுவனத்திடமிருந்து அதே உத்தரவின் ஒரு பகுதியாக 50,000 சாதாரண வெற்று கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. .

இத் தொகுதி கடவுச்சீட்டுகள் ஒக்டோபர் இறுதிக்குள் அல்லது அதற்கு முன் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த வருடம் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில், வெளிநாடுகளுக்குச் சென்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 23% ஆகும்.

எனவே வெற்று கடவுச்சீட்டுகளின் இருப்பு கிடைக்கும் வரை கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் வருந்துவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects