இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று (27.08.2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 130 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇