பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் போக்கு மோசமடைந்து வரும் நிலையில், புதிய அணியைத் தெரிவு செய்வதற்கு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மோசின் நாவிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடுகின்ற நூற்றுக் கணக்கான வீரர்களை செயற்கை நுண்ணறிவு முறைமையொன்றுக்குள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான செயன்முறையில் 20சதவீத பங்களிப்பு மனிதர்களுடையதும், 80 சதவீத பங்களிப்பு செயற்கை நுண்ணறிவுடையதுமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇