ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று (27.08.2024) முதல் முன்னெடுக்கப்படுகின்றன.
இப் பணிகளுக்காக அஞ்சல் திணைக்களத்தின் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇