சர்வதேச கிராமியப் பெண்கள் தினத்தினை முன்னிட்டு கிராமிய மகளிரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் எம்.எல்.எம்.வுஹாரி தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந் நிகழ்வு நேற்று (15) திகதி இடம்பெற்றது.
“அனைவருக்கும் நல்ல உணவினை பயிரிடும் கிராமியப் பெண்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றியீட்டிய மகளிர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பெண் பிரதிநிதிகளும், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇