நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,086 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,884 ஆகும்.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், வட மாகாணத்திலிருந்து 4,676 டெங்கு நோயாளர்ளும், மத்திய மாகாணத்திலிருந்து 3,630 டெங்கு நோயாளர்ளும், வடமேல் மாகாணத்திலிருந்து 2,415 டெங்கு நோயாளர்ளும், தென் மாகாணத்திலிருந்து 2,633 டெங்கு நோயாளர்ளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇