கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதமாக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதேநேரம், உணவுப் பணவீக்கம் , ஓகஸ்ட் மாதத்தில் 0.8 சதவீதமாகவும் உணவல்லாப் பணவீக்கம் 0.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇