2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதன்படி, மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இதற்கமைய, குழு ‘A”வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
அத்துடன் குழு ‘B”யில் பங்களாதேஷ், இலங்கை, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் அடங்குகின்றன.
அதேநேரம் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தமது முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்த்துப் போட்டியிடவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇