மட்டக்களப்பில் முன்பள்ளி சிறார்களின் ஓவிய கண்காட்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பில், முன்பள்ளி சிறார்களினால் வரையப்பட்ட ஓவிய கண்காட்சி மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், புதிய மாவட்ட செயலகத்தில் 24.03.2025 அன்று நடைபெற்றது.

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ், மாவட்ட செயலகத்தின் முன்பள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு மற்றும் கலாசார பிரிவு ஒருங்கிணைந்து, சிறார்களின் கற்பனை ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் திராய்மடு கிராம சேவகர் பிரிவில் உள்ள ஐந்து முன்பள்ளி பாடசாலைகளின் சிறார்கள் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்வில், அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள், அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள், பெற்றோர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects