கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ளதால் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் (02.09.2024) நீண்ட வரிசையில் மக்கள் காத்திருகின்றனர்.
பிராந்திய காரியாலயத்தில் நாளாந்தம் 25 அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவிர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருகின்றனர்.
எவ்வாறாயினும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான முறையான நடைமுறைகளை பின்பற்றாததன் காரணமாகவே இந் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇