2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கைப் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று (19.03.2026) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை உலகளவில் குறைந்தளவான மகிழ்ச்சியுடைய நாடாக 134 ஆவது இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 147 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இலங்கை 4.0 புள்ளிகளைப் பெற்று 134 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு 133 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது ஒரு இடம் பின்வாங்கியுள்ளதுடன் எத்தியோப்பியாவுடன் ஒரே நிலையில் காணப்படுகிறது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா (116), பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கையை விட அதிக மகிழ்ச்சியான நாடுகளாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அறிக்கையின் விசேட அம்சமாக, இளைஞர்களின் மனநலத்தில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடே முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழமை போன்று இம்முறையும் நோர்டிக் (Nordic) நாடுகளே பட்டியலின் முன்னணியில் உள்ளன:

01.பின்லாந்து தொடர்ச்சியாக 9 ஆவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

02.ஐஸ்லாந்து

03.டென்மார்க்

04.கொஸ்டாரிகா லத்தீன் அமெரிக்க நாடொன்று இப்பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சவால்கள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சமூக அமைதியின்மை போன்ற காரணிகளே நாட்டு மக்களின் வாழ்க்கை திருப்தி குறைவடைந்தமைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

அதேநேரம், போர்ச் சூழலில் உள்ள ஆப்கானிஸ்தான் இப்பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects