இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் செப்டம்பர் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணிவரையிலும், முதலாம் பாகம் காலை 11.15 மணி முதல் 12.15 மணிவரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேடு சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை பெயர்ப்பட்டியல் கிடைப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளங்களுக்குச் சென்று உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், 02.09.2024 முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் – 0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413
அவசர இலக்கம் – 1911
தொலைநகல் – 0112 784422
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇