ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் 2025 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஜனவரி மாதம் நிறைவடைந்த பின்னர் அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
இரண்டு வருட சுழற்சி பருவ காலத்தைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இரண்டு அணிகளை 69 போட்டிகளைக் கொண்ட 27 டெஸ்ட் தொடர்கள் தீர்மானிக்கும்.
தற்போதைய ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா முதல் இடத்திலும் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.
நியூஸிலாந்தும் பங்களாதேஷும் அடுத்த இரண்டு இடங்களில் இருக்கின்றன.
அங்குரார்ப்பண உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை நியூஸிலாந்து 2019இல் வென்றதுடன் இரண்டாவது அத்தியாயத்தில் அவுஸ்திரேலியா 2023இல் சம்பியனானது.
அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா இரண்டாம் இடத்துடன் திருப்தி அடைந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇