பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் 08.01.2025 அன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்று நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇