மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் உலக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் சித்திரக் கண்காட்சியும், பரிசளிப்பும் பிராந்திய பணிமனை வைத்தியர் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளர் சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ் சிறப்பு அதிதியாகவும், ஓய்வுநிலை சித்திரபாட ஆசிரியர் க.சற்குருலிங்கம், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் சி.இரவீந்திரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது சித்திரப் போட்டியில் தேசிய ரீதியில் தெரிவான 20 பேருக்கும், மாவட்ட ரீதியில் தெரிவான 52 மாணவர்களுக்கும் பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.பகீரதன், பிராந்திய பல்வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.கோகுலரமணன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇