ஜனாதிபதித் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா முரளளிதரன் தலைமையில் , மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.09.2024 அன்று நடைபெற்றது.
இப் பயிற்சிச் செயலமர்வில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டன.
நிகழ்வில் உதவி தெரிவத்தாட்சியகர் ரீ.ஜெய்தனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇