இந்த மாதத்தின் கடந்த 20 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 131,684 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து 19,832 பேரும், ரஸ்யாவில் இருந்து 19,393 பேரும், ஜேர்மனியில் இருந்து 11,936 பேரும், சீனாவிலிருந்து 8,183 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇