நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இவ் விடயத்தினை இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வருடம் ஒன்றில் சுமார் மூவாயிரம் பேர் வாய்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
நாள் ஒன்றில் மூன்று பேர் வாய்ப்புற்று நோயினால் மரணிக்கின்றனர்.
பொதுமக்கள் வாய் சுகாதாரம் தொடர்பில் அக்கறையின்றி செயற்படுகின்றதன் காரணமாகவே வாய் சார்ந்த நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.
எனவே, நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்கும் முறைமையை கடைப்பிடிக்குமாறு இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க வலியுறுத்தியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










