இலங்கை இராணுவத்தினரால் அங்க அவயங்களை இழந்தவர்களுக்கு செயற்கைகால் வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமான செயற்பாடுகளில் ஒன்றான அங்க அவயங்களை இழந்தவர்களுக்கான செயற்கைகால் வழங்கும் நிகழ்வானது கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குலதுங்க தலைமையில் வெளிகந்தை கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.

கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குலதுங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இப்பிரதேசங்களில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது கால்களை இழந்த 40 க்கு மேற்பட்ட நபர்களுக்கு கால்களின் அளவுகள் பெறப்பட்டு அவர்களுக்கான செயற்கை அவயங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

தூர பிரதேசங்களில் உள்ளவர்களின் பாத அளவீடுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு மேஜர் ஜெனரலினால் இப்பிரதேசத்திற்கு நடமாடும் இச்சேவையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது அங்கவீனர்களுக்கான புதிய செயற்கை அவயங்களுக்கான அளவீடுகள் பெறப்பட்டு புதிய செயற்கை கால்கள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

மேலும் தூர பிரதேசங்களில் உள்ள அங்கவீனர்களுக்கான போக்குவரத்து ஏற்பாட்டை இராணுவத்தினரே மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொழும்பு நட்புறவுச் சங்கத்தின் (Colombo friend – in – Need Society ) அனுசரனையில் ரொட்டரி கொழும்பு கபிட்டல் சிற்றி சிறிலங்கா (Rotary Capital City Sri Lanka) நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் பயனாளிகளுக்கான செயற்கை கால்களை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குலதுங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இராணுவத்தினரினால் இன மத பேதமின்றி அவயம் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னால் போராளிகளுக்கும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கெனல் பிரபாத், ரொட்டரி கழக தவிசாளர் ஹெமந்த அப்போன்சு, கபிட்டல் சிற்றி வைத்தியர் ரஜிஞ்ஜிவ் ராஜபக்ச, திட்ட முகாமையாளர் எஸ்.எம் பண்டார, பிரிகேடியர்கள், லெப்டினன்ட் கர்னல் தம்மிக விரசிங்க மற்றும் உயர் அதிகாரிகள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects