மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்படவுள்ள அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை சுகாதார அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக அதிநவீன இதய வடிகுழாய் ஆய்வகம் (Cath Lab) நிறுவப்படவுள்ளது. மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை மற்றும் காலி ஆகிய நான்கு வைத்தியசாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட 715 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் இந்த வசதி இல்லாததால், மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அவசர சிகிச்சைகளுக்கு மட்டக்களப்பு மக்கள் கொழும்பு அல்லது கண்டி போன்ற தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப் புதிய ஆய்வகத்தின் வருகையோடு, நோயாளிகளுக்கு சிகிச்சையை இங்கே வழங்க முடியும் .

இதன் மூலம் நீண்ட பயணச் செலவுகள் மற்றும் நேர விரயம் தவிர்க்கப்படுவதுடன், இதயச் சிகிச்சைக்கான நீண்ட காத்திருப்புப் பட்டியல்களும் குறைக்கப்படும். இத் திட்டம் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்து, எமது மக்களின் சுகாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது.

சுகாதார டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்களின்படி, இந்த ஆண்டுக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects