மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவம்பர்14ஆம் திகதி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.11.2023 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி பிரசாந்தி லதாகரன், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திருநவன், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமாரன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மாவட்ட செயலகமும் இணைந்து இத் தொற்றா நோய்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியதுடன், செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வு தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇